விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியான கங்கர்செவல், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கன்குளம், காக்கிவாடான்பட்டி, நதிக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாளை மின் விநியோகம் துண்டிக்கப்படும். இந்த தகவலை மின் மின் வாரிய நிர்வாக செயற்பொறியாளரான திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.