பராமரிப்பு பணி நடைபெறுவதால் கிராமங்களுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இளையான்குடி மின் உற்பத்தி நிலையத்திற்கு உட்பட்ட இடையமேலூர், வில்லிபட்டி, மேலப்பூங்குடி, சாலூர் மற்றும் மல்லம்பட்டி போன்ற கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என சிவகங்கை மின்வாரிய பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இடையமேலூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப் போவதாக பொறியாளர் தெரிவித்துள்ளார்.