Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரவு நேரத்துல ரொம்ப சிரமம்மா இருக்கு… அடிக்கடி ஏற்படும் மின்தடை… கோரிக்கை விடுத்த மக்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்வாரிய நிலையத்தில் மின் பாதையில் ஏற்பட்ட பழுதை சரி செய்து தரக்கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை பகுதியில் மின் வாரிய நிலையம் அமைந்துள்ளது. அந்த மின்வாரிய நிலையத்திலிருந்து கள்ளுக்காரன்பட்டி, கணபதிபுரம் வண்ணாரப்பட்டி, ஆதனக்கோட்டை, தொண்டைமான்ஊரணி மற்றும் வளவம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யப்படுகின்றது. அந்த மின் வாரிய நிலையத்தில் சில மாதங்களாகவே மின் பாதையில் பழுது ஏற்பட்டதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது.

இதனால் பலத்த காற்றுடன் மழை பெய்தால் அன்றிரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டு மறுநாள் காலையில் தான் மின்சாரம் விநியோகிக்கப்படுவதால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |