காரியாபட்டி பகுதியில் பராமரிப்பு பணிக்காக இன்று மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியான காரியாபட்டி, ஆவியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மின் விநியோகம் துண்டிக்கப்படும். இந்த தகவலை மின் பகிர்மான செயற்பொறியாளரான கண்ணன் என்பவர் தெரிவித்துள்ளார்.