பிரிட்டனின் எசெக்ஸ் என்ற பகுதியில் திடீரென்று மின் தடை ஏற்பட்டதால், பிரபல வணிக வளாகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
பிரிட்டனிலுள்ள எசெக்ஸ் என்ற பகுதியில் இருக்கும், மிகப்பெரிய வணிக வளாகத்தில், வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்த சமயத்தில், திடீரென்று மின் தடை ஏற்பட்டது. எனவே, அந்த வணிக வளாகத்திலிருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். மக்கள் வெளியேற்றப்பட்ட பகுதியில் அதிகமான கூட்ட நெரிசல் இருந்துள்ளது.
இது தொடர்பில், சிலர் சமூக ஊடகங்களில், உணவு அருந்தும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டு விட்டது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், West Thurrock பகுதிக்கு உள்பகுதி மற்றும் சுற்று வட்டாரத்தில் இரண்டு முறை மின்தடை ஏற்பட்டது என்று மின்சார துறை தெரிவித்திருக்கிறது. மேலும், மின் தடையால் புகார் தெரிவிக்க 600 அழைப்புகள் வந்ததாகவும் தெரிவித்திருக்கிறது.