பாகிஸ்தான் நாட்டில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் பல மணிநேரங்கள் மின்தடை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடும் எரிசக்தி நெருக்கடி காரணமாக மின்தடை ஏற்பட்டு வருகிறது. எனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. நகர்புறங்களில் 6-லிருந்து 10 மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுவதாகவும், கிராமங்களில் ஒரு சில பகுதிகளில் 18 மணி நேரங்கள் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.
எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, விநியோகத்தில் மாறுபாடு ஏற்படுவதால் மின் உற்பத்தி ஆலைகளில் தகுந்த மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாமல் போனது. எனவே சுமார் 6,000-லிருந்து 7 ஆயிரம் மெகாவாட் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மேலும், இவ்வாறு அதிக நேரத்திற்கு மின்வெட்டு ஏற்படுவது தங்களின் வேலைக்கு தொந்தரவாக உள்ளது என்று வணிகர்கள் கூறுகிறார்கள்.
இது மட்டுமல்லாமல் கோடை காலத்தில் அதிக வெப்பம் மின் தேவையின் காரணத்தால் மேலும் மின்வெட்டு அதிகரிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மின்வெட்டால் அங்கிருக்கும் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.