Categories
தேசிய செய்திகள்

“தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்”… டெல்லியிலும் உணரப்பட்ட நில அதிர்வு…!!

தஜிகிஸ்தானை மையமாகக் கொண்டு நேற்று இரவு 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் வட மாநிலங்களில் அதிர்வு உணரப்பட்டது.

வீடுகளில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியே ஓடிவந்தனர். பூமியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், கைபர்-பக்துன்கவா, பஞ்சாப் மாகாணங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டது. டெல்லி என்.சி.ஆர், வட மாவட்டங்களிலும் இந்த நில அதிர்வு சில வினாடிக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் நில அதிர்வை கண்டு உயிரை காப்பாற்றிக்கொள்ள வீட்டில் இருந்து வெளியேறி சாலைக்கு ஓடி வந்தனர்.

இதுவரை வட மாவட்டங்களில் நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி காணொளி மூலம் சிகாகோ பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அரை முழுவதும் குலுங்கியது. பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பதிவிட்ட ட்விட்டர் கருத்தில் அமிர்தசரஸ் உள்ளிட்ட பஞ்சாபின் பிற பகுதிகளில் சேதம் ஏற்பட்டு அதற்கான எந்த தகவலும் இல்லை. பஞ்சாப் போலீசார் மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மத்திய நில அறவியல் அமைச்சக செயலாளர் எம்.ராஜீவன் கூறுகையில், “கணினியில் பதிவான தகவல்களை நம்பி தஜிகிஸ்தான், அமிர்தசரஸ் ஆகியவற்றில் இரு நிலநடுக்கம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரு நில அதிர்வு ஏற்படவில்லை. தஜிகிஸ்தானில் மட்டும்தான் இரவு 10.31 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இமயமலை மற்றும் இந்துகுஷ் மலைப்பகுதிகளில் ஏற்படும் நில அதிர்வுகள் இந்திய-கங்கை பகுதிகளில் உணரப்படும்” எனத் தெரிவித்தார்.

Categories

Tech |