ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்க இருப்பதால் பல்வேறு ஊர்களில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (28ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை நடக்கிறது.. எனவே புன்னக்காயல், ஆத்தூர், பேயன்விளை, வீரபாண்டிய பட்டினம், காயல்பட்டணம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், சுகந்தலை, நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித் தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்கோளூர், ஆகிய ஊர்களில் நாளை செவ்வாய்கிழமை (28ஆம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்..