இன்று மாலை இந்தோனேசியாவில் எதிர்பாராதவிதமாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள கொடமொபாகு என்ற பகுதியில் இன்று மாலை 3.39 மணி அளவில் 224 கிலோமீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம், இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.