பசுபிக் கடல் பகுதியில் உள்ள பிஜி தீவின் பிராந்திய பகுதிகளில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பசுபிக் கடல் பகுதியில் உள்ள பிஜி தீவின் பிராந்திய பகுதிகளில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிஜி தீவு நிலநடுக்கம் அதிகமாக பாதிக்கக்கூடிய நெருப்பு வளைய பகுதியில் பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இதன் காரணமாக அடிக்கடி இந்த பகுதியில் நிலநடுக்கங்களுடன் எரிமலை சீற்றமும் உருவாகும் என்று கூறப்படுகிறது.
இந்தப் பயங்கர நிலநடுக்கமானது தீர்க்க ரேகையிலிருந்து 179.36 டிகிரி அளவிலும், அட்சரேகையிலிருந்து 21.8295 டிகிரி அளவிலும் உள்ள பகுதியில் பதிவாகியுள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.