தென்பசிபிக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உறுதிசெய்யப்ட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் பசிபிக் கடல் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தென் பசிபிக் பகுதியில் இருக்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வனுவாட்டு மற்றும் நியூ கலிடோனியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் நியூ கலிடோனியா வில் உள்ள பகுதியிலிருந்து கிழக்கு திசையில் 415 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் பல்வேறு நாடுகளில் உள்ள இடங்களில் சக்தி வாய்ந்த சுனாமி அலைகள் எல்லாரும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பிஜி, நியூஸிலாந்து ஆகிய பகுதிகளிலும் சுனாமி ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலநடுக்கத்தால் தான் சுனாமி ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் சுனாமி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆணையம் ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது. நியூசிலாந்தின் வடக்குப் பகுதிகள் எப்போதுமே சுனாமி குறித்த ஆபத்திலேயே இருப்பதால் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு செல்லும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.