தனது கட்சியில் வந்து சேருமாறு ரஜினி அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பவர்ஸ்டார் சீனிவாசன்
தெலுங்கில் வெளியான திரைப்படத்தை தமிழில் டப்பிங் செய்து சிவகாமி எனும் பெயரில் வெளிவர இருக்கிறது. இது பழைய அம்மன் படங்களை போன்று இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பஷீர், பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகர் ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன் ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைப்பதாக கூறி சீக்கிரமாக கட்சி தொடங்குங்கள் எனவும் அந்த கட்சியில் என்னை சேர்த்து விட்டு என்னை துணை முதல்வராக மாற்றி விடுங்கள் என கேட்டதோடு இல்லை என்றால் நான் கட்சி ஆரம்பிக்கிறேன். நீங்கள் வந்து சேருங்கள் என கூறியிருக்கிறார்.