Categories
சினிமா தமிழ் சினிமா

இவருடைய அப்பாவா இவர்….? ட்விட்டரில் வெளியிட்ட பாலிவுட் நடிகை…. திரையுலகினர் அஞ்சலி….!!

பிரபல பாலிவுட் நடிகையான ஆக்காங்ஷா சிங்  தந்தையின் மறைவிற்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தி சினிமாவில் தொலைக்காட்சி தொடரின் மூலமாக பிரபலமானவர் ஆக்காங்ஷா சிங். இவர் பத்ரிநாத் கி துல்ஹனியா என்ற பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தெலுங்கில் மல்லிகா ராவ் என்ற படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் நாகார்ஜுனா மற்றும் நானியுடன்  இணைந்து தேவதாஸ் படத்திலும் நடித்துள்ளார். இவரின் தந்தையான க்யான் பிரகாஷ் சிங் தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் மரணமடைந்துள்ளார் என்பதை ஆக்காங்ஷா சிங்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரின் மறைவிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது ஆக்காங்ஷா சிங் கிளாப் என்ற தமிழ் திரைப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |