Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பிரபல ஜவுளி நிறுவனம் பெயரில் போலி மாஸ்க் தயாரிப்பு…!!

பிரபல உள்ளாடை  தயாரிப்பு நிறுவனம் பெயரில் போலி முகக்கவசம் தயாரித்த நபர்களை லாவகமாக பிடித்து ஊழியர்கள் அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூரை தலைமையகமாக கொண்டு வேட்டி, சட்டை மற்றும் உள்ளாடைகள் தயாரிப்பு என மிகப்பெரிய அளவில் விற்பனை செய்து வரும் தனியார் நிறுவனம், தற்போது முக கவசங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் முகநூல் பக்கத்தில் சீனு என்பவர்  பிரபல நிறுவனத்தின் பெயரில் உள்ள மாஸ்க் குறைந்த விலையில் கிடைக்கும் என விளம்பரம் பதிவிட்டதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக நிறுவனத்தின் தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து முகக்கவசம் ஆர்டர் செய்வது போல் குடோனுக்கு சென்று பார்த்த ஊழியர்கள் பிரபல நிறுவனத்தின் முத்திரையுடன் போலியாக தயாரிக்கப்பட்ட முகக் கவசங்கள் மூட்டை மூட்டையாக வைக்கப்பட்டிருந்ததை கண்டு திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக குடோனுக்கு விரைந்த காவல்துறையினர் போலி முக கவசங்களை பறிமுதல் செய்து நேர்மை நாதன், முருகன், சீனு ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |