பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் நெய்மர் தற்போது பி. எஸ். ஜி. எனப்படும் பாரிஸ் ஜெர்மைன் எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த யு. இ. எப். ஏ. சாம்பியன் லிக் தொடரின் இறுதி ஆட்டத்தில் பைரன் முனீஸ் கிளப் அணியிடம் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் தோல்வி அடைந்தது.
இதற்கிடையில் அணி சார்பில் நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் விளையாடிய நெய்மர், ஏஞ்சல் டிமரியா மற்றும் லியாண்டரோ பாராடேஸ் ஆகிய 3 வீரர்களுக்கும் கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல் பி. எஸ். ஜி. அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிஎஸ்ஜி கிளப் அணி வீரர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.