உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் கால்பந்தில் யூவன்ஸ் அணியாக விளையாடுகிறார். தற்போது ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான தேசிய லீக் தொடரில் பங்கேற்றார். சமீபத்தில் பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் ரொனால்டோவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ரொனால்டோவுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என்ற போதும் வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த தகவலை போர்டுகள் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக சுவீடனுக்கு எதிரான நேஷனல் லீக் போட்டிக்காண போர்டுகள் அணியிலிருந்து ரொனால்டோ நீக்கப்பட்டுள்ளார்.