Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் அஜித் நடிக்கும் ‘வலிமை’ படப்பிடிப்பு தாமதம்

திரைப்படத்துறையில் முன்னணி நடிகரான தல அஜித் அவர்கள் நடித்த ‘நேர்கொண்ட பார்வை‘ படத்திற்குப் பிறகு வினோத் இயக்கத்தில் நடிக்கும் படம் ‘வலிமை‘. இப்படத்தில் முக்கிய கதாநாயகனாக தல அஜித் நடிக்கிறார். இதைத் தவிர மற்ற கதாப்பாத்திரங்களில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பது பற்றிய முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இப்படத்தில் கதாநாயகி யார் நடிக்கப் போகிறார்கள் என்ற மற்றொரு தகவலும் அறிவிக்கப்படவில்லை. கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் ஆரம்பமானது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அடுத்த கட்டமாக எந்தவிதமான படப்பிடிப்பும் நடக்கவில்லை. இப்படத்தில் போலீஸ் கதை இடம் பெற்றுள்ளதால் ‘தர்பார்‘ படத்தில் உள்ள காட்சிகள் எதுவும் ‘வலிமை’ படத்தில் இடம்பெறக் கூடாது என்பதற்காக படப்பிடிப்பு தாமதமாகிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது .

தற்போது ‘தர்பார்‘ படமும் வெளியாகிவிட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடர்ந்து இன்னும் நடக்காமல் இருக்கின்றது. இப்படப்பிடிப்பிற்கான மற்றொரு செய்தியும் வெளியாகி உள்ளது. என்னவென்றால் படப் பிடிப்பிற்கான பட்ஜெட் சிக்கலான நிலையில் உள்ளதால் படப்பிடிப்பு தாமதமாவதாகத் தெரிவிக்கிறார்கள்.

Categories

Tech |