Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வழியில் சென்ற நபர்…. கொலை மிரட்டல் விடுத்த ரவுடி…. கைது செய்த போலீஸ்….!!

வழியில் சென்றவரை வழி மறித்து கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூட்டாம்புளி பழைய பாலம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் புதியம்புத்தூர் பகுதியில் வசிக்கும் முருகன் என்பதும், மேலும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் வழிமறித்து தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் முருகனை கைது செய்தனர். மேலும் முருகன் மீது புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு உள்பட 3 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட 6 வழக்குகளும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 3 வழக்குகளும், தட்டப்பாறை காவல்நிலையத்தில் 1 திருட்டு வழக்கு உள்பட மொத்தம் 15 வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |