Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பிரபல சினிமா நடிகரான இவரை கண்டித்து…. பா.ம.க.வினர் போராட்டம்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

நடிகர் சூர்யாவை கண்டித்து பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தமிழ் சினிமா நடிகரான சூர்யா நடித்த திரைப்படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நடிகரான சூர்யாவை கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் ஆகியவற்றின் சார்பாக ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள அந்தியூர் பிரிவில் கண்டன போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.

அப்போது வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன், பவானி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் சர்வேயர் வேலு, மாவட்ட துணை செயலாளர் ஆண்டவன், வக்கீல் கிருஷ்ணமூர்த்தி போன்றோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.சி.ஆர் கோபால் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் பாலகிருஷ்ணன், நடராஜ், கண்ணன், பிரபாகரன் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். அதன்பின் இறுதியில் நகர பொறுப்பாளர் பரணிதரன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Categories

Tech |