பிரபல நடிகை தமன்னா தமிழ் திரைப்படத்துறையில் தர்மதுரை, பாகுபலி2, நண்பேன்டா, அயன் மற்றும் ஸ்கெட்ச் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழில் புதிய படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா தனது வாழ்வு முறையே மாற்றிய இரண்டு புத்தகங்களைப் பற்றி கூறியுள்ளார் . எனக்கு அதிகமாக புத்தகங்கள் படிக்கக் கூடிய பழக்கம் கிடையாது. ஆனாலும் நான் 2 புத்தகங்கள் தான் படித்தேன். அது எனது வாழ்வு முறையே மாற்றியது.
முதலாவதாக ஓஷோ எழுதிய ‘உண்மையான பெயர்‘ என்ற புத்தகத்தை படித்த பிறகு ஆன்மீகத்தில் எனக்கு ஈடுபாட்டையும் மற்றும் புதிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவதாக ரோரி ப்ரீட்மேன் மற்றும் கிம் பர்னூயின் எழுதிய ‘ஸ்கின்னி பிட்ச் ‘ என்ற புத்தகத்தை படித்த பிறகு நான்வெஜ் உணவுகளை விட்டு விட்டு வெஜிடரியனுக்கு மாறினேன். இப்படி இந்த இரண்டு புத்தகங்களும் எனது வாழ்வு முறையே மாற்றி விட்டது என்று கூறனார் தமன்னா.