தமிழ் இயக்குநர் ராமியின் மனைவியான செந்தில் குமாரி அவர்கள் சரவணன் மீனாட்சி தொடரில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார். மேலும் இவர் மெர்சல் மற்றும் மதுர வீரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். செந்தில் குமாரி பசங்க படத்தில் தனது தனித்தன்மை வாய்ந்த குரலில் அனைவராலும் பாராட்டப் பெற்றார்.
செந்தில் குமாரி அவர்கள் தன்னுடைய இளமை காலம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி கொடுத்துள்ள போது நான் நடிகர் விஜயின் தீவிர ரசிகை என்று பதில் அளித்துள்ளார். நான் திருமணம் ஆன பின் தான் சினிமாவில் நடிக்க வந்துள்ளேன். எனக்கு இளமைக் காலத்திலிருந்து விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. என்னுடைய சகோதரிக்கு திருப்பாச்சிப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அவர் நடிக்கப் போயிருந்தார்.
தனது lசகோதரியோடு சென்றால் நடிகர் விஜய்யே பார்த்து விடலாம் என்ற எண்ணத்தில் நானும் அவரோடு படபிடிப்புக்குச் செல்ல அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் என்னுடைய கணவர் அதை தடுத்து விட்டார். அதையும் மீறி நான் போவேன் என்று சொன்னதும் அவர் என்னை தள்ளி விட்டதில் எனக்கு படுகாயம் ஏற்பட்டது. இருப்பினும் நான் படபிடிப்புக்கு சென்று அங்கு விஜய்யை பார்த்தேன் என்று செந்தில் குமாரி கூறியுள்ளார்.