பிரபல தமிழ் வர்த்தகரின் வீட்டில் கார் திருடப்பட்ட சம்பவத்தின் சி.சி.டிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
பிரிதானியாவின் தலைநகரமான லண்டனின் லூசியம் பகுதியில் உள்ள பிரபல தமிழ் வர்த்தகர் தன்னுடைய காரை விற்பதற்காக இணையத்தில் பதிவு செய்தார். இந்த விளம்பரத்தை பார்த்த 3 பேர் காரை பார்க்கவேண்டும் என்று வர்த்தகரை தொடர்பு கொண்டுள்ளனர்.
அதன்படி அவர் வீட்டிற்கு வந்த 3 பேர் தெளிவாக காரின் மேலதிக சாவியை எடுத்துவிட்டு தாங்கள் கொண்டுவந்த சாவியை வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அதே பகுதிக்கு இரவு நேரத்தில் வந்த அவர்கள் 3 பேரும் அந்த சாவியை பயன்படுத்தி காரை திருடிச் சென்றனர். இதுகுறித்த சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளது.