தமிழக டிஜிபி சைலேந்திரபாபு 14 டிஎஸ்பிக்களை அதிரடியாக பணி மாற்றம் செய்துள்ளார். அதன்படி ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னரசு தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். அதன் பிறகு ஈரோடு அதிரடி படை டிஎஸ்பி சுகுமார் கோவை மாநகர சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையராகவும், கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனர் பார்த்திபன் சிங்காநல்லூர் சரக டிஎஸ்பி ஆகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பி சகாயஜோஸ் ஆலங்குளம் சரக டிஎஸ்பி ஆகவும், திருச்சி மாநகர் மத்திய குற்றப்பிரிவு ஆணையர் பாரதிதாசன் ஜீயர்புரம் சரக டிஎஸ்பி ஆகவும், திருச்சி மாநகர் குற்ற ஆவண காப்பக உதவியாளர் கென்னடி திருச்சி கண்டோன்மென்ட் உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சென்னை மாநகர உளவுத்துறை உதவி ஆணையர் மணிமேகலை செங்கல்பட்டில் உள்ள மதுராந்தகம் சரக டிஎஸ்பி ஆகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பி பிரகாஷ் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆகவும், திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஈஸ்வரன் திருப்பூர் மாநகர் உளவுத்துறை உதவி ஆணையராகவும், மதுரை குற்றப்பிரிவு டிஎஸ்பி ரவிக்குமார் கோவை மாநகர் ஆர்எஸ்எஸ் புரம் உதவி ஆணையராகவும், திருவண்ணாமலை சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையர் டிஎஸ்பி ரமேஷ் கள்ளக்குறிச்சி சப் டிவிஷன் டிஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த வினோஜி விருதுநகரில் உள்ள சாத்தூர் சப் டிவிஷன் டிஎஸ்பி ஆகவும், தேனி மாவட்டத்தில் பயிற்சியில் இருந்த ராஜேஸ்வரன் நெல்லை ஜங்ஷன் சரக உதவி கமிஷனர் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கார் குண்டு வெடிப்பு நடந்த சம்பவத்தின் காரணமாக உளவுத்துறை டிஎஸ்பி மாற்றப்பட்டுள்ளார். அதாவது டிஎஸ்பி பார்த்திபன் உளவுத்துறைக்கு வந்து ஒரு மாதத்திலேயே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால் புதிய டிஎஸ்பி ஆக பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.