பிரபாஸ் மற்றும் கிரித்தி சனோன் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா நடிகரானார். இதன் பின்னர் இவர் சஹோ, ராதேஷ்யாம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் நடிப்பில் ஆதிபுருஷ், ப்ராஜெக்ட் கே, சலார் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஆதிபுரூஷ் படத்தின் டீசர் நேற்று ரிலீசானது.
இந்த படத்தின் கதாநாயகி கிரித்தி மற்றும் பிரபாஸ் இந்த படத்தின் விழாவில் கலந்து கொண்டனர். பிரபாஸ் மற்றும் கிரித்தி இவர்களின் வீடியோவை ரசிகர்கள் சிலர் பதிவிட்டு இருவரும் காதலித்து வருவதாக தகவல் பரப்பி வருகின்றனர்.
ஆதிபுரூஷ் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கிய நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவி வருகிறது. ‘பாகுபலி’ படம் வெளியான போது பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் காதலிக்கிறார்கள் என செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.