Categories
இந்திய சினிமா சினிமா

பிரபாஸ் திருமணம் உறுதியானது … மணமகள் இவரா ?

நடிகர் பிரபாஸ் இந்த வருட இறுதியில் திருமணம் செய்து கொள்வார் என உறவினர்கள் கூறியுள்ளனர்.

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் தனக்கென தனி கால் தடம் பதித்துள்ளார்.  உதாரணமாக, பாகுபலி படத்தின் மூலம் தமிழ் நாட்டு மக்களின் மனதை வென்றவர் பிரபாஸ். இவர் தற்போது சுஜித் இயக்கத்தில் சாஹோ  என்ற படத்தில் நடித்து வருகிறார் . இந்த படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. குறிப்பாக இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிட உள்ளதாக படக்குழு கூறியுள்ளது.

Image result for prabhas

தற்போது பிரபாஸுக்கு 39 வயது ஆகிவிட்டது. எனவே அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் அமெரிக்க தொழிலதிபர் மகளை மணக்க இருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் ஓரிரு மாதங்களில் நிச்சயதார்த்தத்தை முடிக்க பிரபாஸ் வீட்டினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த வருடத்தின் இறுதியில் இவரது திருமணம் நடக்கும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |