“சாஹோ” படத்தின் படக்குழுவினர் நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் . மேலும் “காப்பான்” படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது .
பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ் தற்போது சாஹோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது . ஆனால் படத்தின் பணிகளில் தாமதமானதால் ஆகஸ்ட் 30ஆம் தேதி இப்படமானது ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் 30ம் தேதி சூர்யாவின் காப்பான் படமும், சில தென்னிந்திய திரைப்படங்களும் ரிலீஸ் ஆக உள்ளது.
இதற்காக, சாஹோ படக்குழுவினர் காப்பான் படக்குழுவையும் மற்ற திரைப்பட குழுவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சாஹோ திரைப்படக் குழுவினர் , மற்ற படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதன்பின் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மற்ற படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர்.
இதையடுத்து “காப்பான்” திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதிக்கு படக்குழு தள்ளிவைத்தது . இதனால் சாஹோ படக்குழுவினர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர் . இதன்பின் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளிவரும் “சாஹோ” திரைப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.