தேவி படத்தின் இரண்டாவது பக்கத்தில் நடிகர் பிரபு தேவா பேயாக நடித்துள்ளார்.
தமிழில் பேய் படங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையில் வருடத்துக்கு 25-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் வெளிவருகின்றன. முன்னணி நடிகைகளும் பெரும்பாலும் பேயாக நடிக்க விரும்புகிறார்கள். நயன்தாரா பேயாக நடித்த மாயா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது திரைக்கு வந்துள்ள ஐரா படத்திலும் பேயாக மிரட்டி உள்ளார்.
திரிஷாவும் மோகினி படத்தில் பேய் வேடம் ஏற்றார். பேய் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வசூல் ஈட்டி கொடுப்பதால் பேய் படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்குவதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோல் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள தேவி பேய் படம் 2016-ல் திரைக்கு வந்துள்ளது. இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. இதில் தமன்னா பேயாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தேவி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரபுதேவா பேயாக வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வெற்றிப்படமாக அமையும் என்கின்றனர்.