வினோத் வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசியா பரத்வாஜ், ராய் லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் வுல்ப். இத்திரைப்படம் குறித்து இயக்குனர் கூறியுள்ளதாவது, இத்திரைப்படம் வரலாற்று காலத்திலிருந்து இன்று வரை பயணிக்கும் அறிவியல் துணைக்கதை திரைப்படம் ஆன இதில் திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் இருக்கின்றது.
மேலும் படம் சென்னை, பெங்களூர், புதுச்சேரி, அந்தமான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்சியாக்கப்பட்டது. தற்போது படபிடிப்பு பணிகள் நிறைவு பெற்று புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.