‘தேள்’ படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இயக்குனர் ஹரிகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”தேள்”. இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும், ஈஸ்வரி ராவ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த படம் டிசம்பர் 10ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர். தவிர்க்க முடியாத சில காரணத்தால் இந்த படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘தேள்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.