Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

நயன்தாரா மீது கோபம் கொண்ட பிரபல நடிகரின் மனைவி …!!

பிரபுதேவாவின் முன்னாள் மனைவி பேட்டியொன்றில் நயன்தாராவை எங்கு பார்த்தாலும் எட்டி உதைப்பேன் என கூறியுள்ளார்

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பல ஹிட் படங்கள் மூலம் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் பிரபுதேவா. நடிப்பு மட்டுமன்றி நடனத்திலும் அதிக ஆர்வம் காட்டி இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரைப் பெற்றவர். கடந்த 2005ல் லதா (ரம்லத்) என்பவரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளை பெற்றார்.

இதனையடுத்து 2011இல் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்றுள்ளனர். அதன்பின்னர் சில ஆண்டுகளிலேயே நயன்தாராவுடன் தொடர்பில் இருந்து 3.5 வருடங்கள் நயன்தாராவை காதலித்து வந்துள்ளார் பிரபுதேவா.

இந்நிலையில் விவாகரத்து குறித்து பிரபுதேவாவின் முன்னாள் மனைவி லதா பேட்டி ஒன்றில் பேசிய பொழுது “திருமணம் முடிந்து எங்கள் வாழ்க்கை நல்ல முறையில் தான் சென்றது. எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார், வீடு வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் நயன்தாராவை விடவே மாட்டேன் எங்கு பார்த்தாலும் கண்டிப்பாக எட்டி உதைப்பேன் என்றும் நயன்தாராவை மன்னிக்கவே மாட்டேன் எனவும்  கூறியுள்ளார். மேலும் பெண்ணொருத்தியின் கணவரை பிரித்தால் அனைவருக்கும்  கொடுக்கும் தண்டனையை நயன்தாராவிற்கும் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |