அமெரிக்காவின் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடயிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், தனக்கான ஆதரவை திரட்டுவதற்காக பிரச்சாரக் பாணி கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
அமெரிக்க நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை தழுவி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து டொனால்ட் ட்ரம்ப் வருகின்ற 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அதற்கான ஆதரவை திரட்டும் விதமாக ஒஹையோ மகாணத்தில் நடைபெற்ற பிரச்சாரக் பாணிக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதில் பேசிய டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் மிகவும் மோசமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.