Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இவங்கதான் அங்க கண்காணிப்பாங்க… இப்படி தான் நடந்துக்கணும்… முடிவடைந்த பயிற்சி வகுப்பு…!!

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு சட்டமன்ற தொகுதியில் நாளை வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதியில் 110 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதியில் 27 நுண்பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் 27 நுண் பார்வையாளர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதற்கு தெற்கு தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான சிவக்குமார் தலைமை தாங்கியுள்ளார். அப்போது தேர்தல் பார்வையாளர் மசீர் ஆலம் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி வழங்கினார். இதனையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு வருவது மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |