‘லவ் டுடே’ படத்தின் அசத்தலான டிரைலர் ரிலீஸாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ”கோமாளி”. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து தற்போது இவர் ”லவ் டுடே” என்ற படத்தை இயக்குகிறார்.
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ராதிகா, சத்யராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில், ‘லவ் டுடே’ படத்தின் அசத்தலான டிரைலர் ரிலீஸாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.