தமிழக காவல்துறையின் சிபிசிஐடி டிஜிபியாக பிரதீப் வி.பிலிப் என்பவரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
முன்னதாக சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமை பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜாபர் சேட் கடந்த 2011ம் ஆண்டில் மண்டபம் பிரிவுக்கான காவல்துறை அதிகாரியாகவும், ஏடிஜிபி யாகவும் இருந்தார். அதன்பின்னர் காவலர் பயிற்சி பள்ளியில் அதிகாரியாக இருந்தார்.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சிபிசிஐடியில் டிஜிபியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இவர் தற்போது குடிமை பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு டிஜிபி- யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து குடிமை பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு டிஜிபி- யாக பதவி வகித்து வந்த பிரதீப் பிலிப் தமிழக காவல்துறையின் சிபிசிஐடி-யின் டிஜிபி யாக மற்றம் செய்யாட்டுள்ளார். இதை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.