Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பசியால் வாடிய முதியவர்… போலீஸ் ஏட்டு செய்த நெகிழ்ச்சி செயல்… டிஐஜி பாராட்டு..!!

திண்டுக்கல் மாவட்ட டி.ஐ.ஜி. முத்துசாமி மனநலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு உதவிய வத்தலகுண்டு போலீஸ் ஏட்டு முத்துஉடையாரை நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் முத்துஉடையார் என்பவர் தும்மலப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அங்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஒரு முதியவர் பசியால் வாடுவதை கண்டுள்ளார். மேலும் அந்த முதியவர் கிழிந்த ஆடை, சடை முடியுடன் இருந்துள்ளார். இதையடுத்து அந்த முதியவருக்கு போலீஸ் ஏட்டு முத்துஉடையார் முடிகளை வெட்டி விட்டு, அவரை குளிக்க வைத்ததோடு புது ஆடையையும் வாங்கி அணிவித்து அதன்பின் அவருடைய பசியையும் உணவு வழங்கி போற்றியுள்ளார்.

மேலும் அவரை கணவாய்பட்டி முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார். இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் போலீஸ் ஏட்டு முத்துஉடையாரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்ததோடு அவருக்கு வெகுமதியும் வழங்கியுள்ளனர்.

Categories

Tech |