Categories
உலக செய்திகள்

கருணையின் முகமாக இந்தியா இருக்கிறது…. புகழ்ந்து தள்ளிய ஐ.நா பொதுச்சபை தலைவர்…!!!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக இருக்கும் அப்துல்லா ஷாகித், இந்தியா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

மாலத்தீவினுடைய வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித், ஐ.நா பொது சபையினுடைய தலைவராக இருக்கிறார். இவர், இந்திய நாட்டை பற்றி தெரிவித்ததாவது, மாலத்தீவு மக்களுக்கு இந்திய நாட்டை வெறுக்கும் விதமான உணர்வை சிலர் பரப்புகிறார்கள். இது ஒன்றுமே இல்லாத அமைப்பினரால் உருவாக்கப்பட்ட பிரச்சாரம்.

அவர்களுக்கு ஒரு கொள்கையும் கிடையாது. வெறுப்பு தான் அவர்களுக்கான கொள்கையாக இருக்கிறது. அதை தான் அவர்கள் மக்களுக்கு பரப்புகிறார்கள். உலகிலேயே இந்தியாவில் தான் அதிக மக்கள் தொகை இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு உதவிகள் செய்திருக்கிறது. பக்கத்து நாடுகள் மட்டுமல்லாமல் அமெரிக்கா, பசிபிக் வரை இந்தியா சென்று சேர்ந்திருக்கிறது.

கருணையின் முகத்தை உலகிற்கு காண்பிப்பது இந்தியா தான். தீவிரவாதம் ஆபத்தானது. அதற்கு மதம் கிடையாது. அதற்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்தியாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமான உறுப்பினராக இணைப்பது பற்றி தன்னால் உறுதியளிக்க முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |