உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என மனைவி மறுத்தும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தனது உடலில் செலுத்த ஒப்புக் கொண்டவருக்கு பாராட்டுகள் குவிகிறது
பிரிட்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் சார்பாக கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இதனை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றது. இதானால் அதற்கான தன்னார்வலர்களை பல்கலைகழகம் தேடிவந்தது. அப்போது லண்டனில் வசித்து வரும் இந்தியரான தீபக் தனது உடலில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீபக் பரிசோதனையில் பங்கேற்க ஒப்புக் கொண்ட பின்னர் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனையில் இருக்கும் ஆபத்துகள் குறித்து அவருக்கு விளக்கியுள்ளனர்.
உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்க தீபக்கின் மனைவி இதற்கு மறுப்பு தெரிவித்தார். ஆனால் அவரோ கொரோனா பரவலை தடுக்க இந்தப் பரிசோதனையில் ஈடுபடுவதில் உறுதியாக இருந்தார். இப்போது தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு பரிசோதனை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தீபக்கின் மனதைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.