ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டுள்ள சூரரைப்போற்று ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தை “உடான்” என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.