புதிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பேராசிரியராக பணிபுரிந்த எம்.பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக வேளாண் குலத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வந்த எம். பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் தற்போது தேர்வு கட்டுப்பாடு அதிகாரியாக பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து எம். பிரகாஷ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் புதிதாக நியமனம் செய்யப்பட்ட எம். பிரகாஷ்க்கு அண்ணாமலை பல்கலைக்கழகத் தொலை தூரக் கல்வி இயக்க இயக்குனர் சிங்காரவேலு மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சம்பத் உள்பட பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.