பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குடியரசு முன்னாள் தலைவரும், காங்கிரஸ் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி காலமான நிலையில், நாடு முழுவதும் இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கொடிகள் அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அனைத்து இந்திய தூதரகங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.