Categories
தேசிய செய்திகள்

கைதாகும் ப.சிதம்பரம் ”’முன்ஜாமீன் மறுப்பு” பதறும் காங்கிரஸ்…!!

 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கின் முழுமையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

Image result for ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு

இந்நிலையில் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க வேண்டும் சிபிஐ தயாராக இருக்கும் நிலையில் இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ  முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை.பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

எனவே அவரை கைது செய்து விசாரிக்கை அனுமதிக்க வேண்டுமென்று  தங்கள் தரப்பு கோரிக்கையை முன்வைத்தனர்.இதையடுத்து இந்த வழக்கில் முன் ஜாமீன் கிடையாது என்ற கூறிய டெல்லி உயர்நீதிமன்றம் அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே நேரத்தில் மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்குகிறோம்  என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |