முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமீப காலங்களாக அவரது உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என ராணுவ மருத்துவ நிர்வாகம் தெரிவித்து வந்தது. 84 வயதான பிரணாப், ராணுவ மருத்துவமனையில், வீட்டில் வழுக்கி விழுந்ததாகவும், அவரது ஒரு கை செயல்படாமல் இருந்ததாகவும் கூறி சென்ற 10ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு முதலில் பரிசோதனை செய்து பார்த்த பொழுது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதற்கான சிகிச்சை எடுத்து வந்த நிலையில், அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ராணுவ மருத்துவ குழு தீவிர சிகிச்சை கொடுத்து வருகிறது. மேலும் மருத்துவ நிர்வாகம் அவ்வப்போது பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் டெல்லி ராணுவ மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிவிப்பில், நேற்று முதல் பிரணாப்பின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.