பிரான்ஸ் ஜனாதிபதிக்கான தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் முதல் சுற்றுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
பிரான்சில் வரும் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் இமானுவேல் மேக்ரான் , Eric Zemmour மற்றும் Marine Le Pen ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர இன்னும் சிலர் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக தற்போது பிரான்சில் இதற்கான வேட்பாளர் அறிவிப்பு, வாக்குறுதிகள் போன்றவை ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் இந்த தேர்தல் குறித்து முதல்கட்ட வாக்கெடுப்பில் யார் அதிக வாக்குகளைப் பெறுவார்கள் என்ற கருத்துக் கணிப்பு நடைபெற்றது. அதில் இமானுவேல் மேக்ரானுக்கு 20 முதல் 25 சதவீத வாக்குகளும், Eric Zemmour 17 முதல் 18 சதவீத வாக்குகளும், Marine Le Pen 16 சதவீத வாக்குகளும் பெறுவார்கள் என்று கூறப்பட்டது. மேலும் ரிபப்ளிக் சார்பாக போட்டியிடும் Xavier Bertrand 14 சதவீத வாக்குகளும், இவரை தொடர்ந்து Valérie Pécresse 10 சதவீதம் மற்றும் Michel Bariner 8 சதவீதம் வாக்குகளை பெறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இதில் இடதுசாரி கட்சியில் அதிக வாக்குகளை பெறும் வாய்ப்பு Jean-luc-Melenchon-கே உள்ளது குறிப்பிடத்தக்கது.