பிரபல முன்னணி நடிகை கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்றுக்கொண்டு மரக்கன்றுகள் நட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியானது.
உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பிரதமர் மோடி அவர்களால் ஈர்க்கப்பட்டு மரம் நடும் “கிரீன் இந்தியா சேலஞ்ச்” என்பதை தெலுங்கானா எம்.பி சந்தோஷ் குமார் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். பிறகு நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட சிலர் இத்திட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் நேற்று நடிகர் நாகார்ஜுனா தனது மருமகள் சமந்தாவுடன் மரக்கன்று நட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுமருமகள் சமந்தாவிற்கு சவால் விடுத்துள்ளார்.
நடிகை சமந்தாவும் மரக்கன்றை நட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். “மாமாவின் சவாலை ஏற்றுக்கொண்டு மூன்றும் மரக்கன்றுகளை நட்டேன், அடுத்து கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தானா மற்றும் தன் தோழி சில்பா ஆகியோரும் இந்த மூன்று மரக்கன்றுகள் நடும் சவாலை செய்து கிரீன் இந்தியா சேலஞ்ச் தொடர வேண்டும்” என கேட்டுக்கொண்டார். மேலும் விரைவில் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா ஆகியோரின் மரக்கன்றுகள் நடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எதிர்பார்க்கலாம்.