பிரபல நடிகரான நிதின் திருமண விழாவில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக மக்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக உற்றார் உறவினர்களுடன் சிறப்பாக நடைபெறும் திருமணங்கள் தற்போது எளிமையாக நடைபெற்று வருகின்றன. திரையுலகின் பிரபலங்களின் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகழும் இதுபோன்றே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் கடந்த ஜூலை 26ஆம் தேதி தெலுங்கு நடிகர் நிதின் திருமணம் நடைபெற்றது.
இருவீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்நிலையில், நித்தின் திருமண விழாவில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நித்தின்-ஷாலினி தம்பதியினர் உட்பட திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றார்கள்.