Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசாந்த் நடிக்கும் ”அந்தகன்” திரைப்படம்…. இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

‘அந்தகன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ”அந்தகன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், சிம்ரன், யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அந்தாதூன்' தமிழ் ரீமேக் 'அந்தகன்': போஸ்டர் வெளியீடு! | Andhagan is the  title of Andhadhun Tamil remake | Puthiyathalaimurai - Tamil News | Latest  Tamil News | Tamil News Online | Tamilnadu News

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடவுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் இரண்டாவது பாடல் மே 26-ஆம் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Categories

Tech |