தமிழில் ரீமேக்காகும் அந்தகன் படத்தில் நடிக்க மற்றுமொரு பிரபல நடிகர் ஒப்பந்தமாகியுள்ளார்.
பாலிவுட்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் அந்தாதூன். இத்திரைப்படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இதில் கதாநாயகனாக நடிகர் பிரசாந்த் நடித்து வருகிறார். பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இப்படத்தை இயக்குகிறார். மேலும் சிம்ரன், வனிதா, யோகி பாபு, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள மற்றொரு பிரபலத்தின் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆகையால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.