பிரபல நடிகர் பிரசாந்த் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான அந்தாதூன் என்ற திரைப்படத்தை தமிழில் “அந்தகன்” என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். இப்படத்தில் பிரபல நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபல நடிகை சிம்ரன் ஹீரோயினாக நடிக்கிறார்.
மேலும் சமுத்திரகனி, பிரியா ஆனந்த், வனிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் பிரசாந்த் தனது பிறந்தநாளை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்ரன், வனிதா, சமுத்திரக்கனி, மனோ பாலா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.