தாய்லாந்து பிரதமர் பதவி விலக கோரி நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
தாய்லாந்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்றது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது . ஆனால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பதவி விலக கோரி தலைநகர் பாங்காக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்தில் அந்நாட்டு பிரதமர் பதவி விலக கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன . இந்நிலையில் போராட்டத்தை தடுக்க போலீசார் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீச்சி அடித்தும் , கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போராட்டத்தை கலைத்தனர் . இதுவரை தாய்லாந்தில் 816,989பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ,6,588 பேர் வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.