பிரதமர் திரு. மோதி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான புதிய கல்விக் கொள்கை பிரதமர் திரு. மோதி தலைமையிலான அரசு கொண்டு வந்தது. இந்த கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களில் ஒன்றான மும்மொழி கொள்கை ஒருங்கிணைந்த தொழிற்கல்வி சமஸ்கிருதத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தல் உள்ளிட்டவற்றிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகமும் கடும் எதிர்ப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் பிரதமர் திரு. மோதி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
காணொலி காட்சியின் மூலம் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர் புதிய கல்விக் கொள்கை பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படும் இருக்கிறது. இதைத்தொடர்ந்து கூட்டத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.